ஏழ்மை தொடர்ந்து செல்வகணபதியின் வாழ்க்கையில் நழுவி அவரின் சிறு வயது போராட்டம் தொடர்ந்தது. குடும்பச் சுமைகளை அவரின் தோள்கள் சுமந்தன. பொங்கல் திருவிழா நாட்களில் இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து சுமந்தன. அவருடைய சொந்த முதலீட்டில் அவருடைய கைகளும், தோள்களும் இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்தை சுமக்கவில்லை. கண்ணாடிக் கடை வைத்து நடத்தும், அண்ணாமலை செட்டியார் சந்தையில் இருந்து மொத்தமாக வாங்கி, இவரிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளார். சுமந்து திருவாரூர் நகர வீதிகளில் நடந்திருக்கிறார். தனது வாழ்நாளின் ஆரம்ப கால போராட்டங்கள் அவரை உறுதிப்படுத்தின.
போலீஸ்காரர்கள் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் துரத்திட தோள்கள் மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்தை சுமக்க நடந்திருக்கிறார். பொங்கல் காலங்களில் மற்றவர்கள் கண்களுக்கு அவை மஞ்சள் கொத்து. ஆனால் அவர் மனதுக்கு அவர் தோள் சுமந்தது குடும்பச் சுமை. தாண் விளையும் ஆரூர் நகருக்கு பள்ளிப்படிப்பை தொடர வந்த செல்வகணபதியை சூழ்நலை துரத்திக் கொண்டே இருந்தது. ஆனால் பள்ளிக்கூட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இட்டு குடும்பச்சுமைகள் சுமந்து வாழ்வை தொடர்வதே சுகம் என நம்பி தொடர்ந்த செல்வகணபதி இப்படி எண்ணினார் நாளெல்லாம் தைப்பொங்கல் தொடரக்கூடாதா ? ஆனாலும் அடுத்தப் பணிக்கு தன்னை ஆயுத்தமாக்க செல்வகணபதி தன்னைமுன்னிலைப்படுத்த தீர்மானித்தார்.
அதன்படி அப்பாவின் நெருங்கிய நண்பரான நாராயணசாமி செட்டியார் அவர்களின் வாட்ச் கம்பெனியில் அவரின் பணி தொடர்ந்தது. கடிகார முட்கள் போல ... வாழ்க்கை சுழன்றோடத் துவங்கியது. அன்று முதல் செல்வகணபதி உள்ளும், வெளியும் மகிழ்ந்துப் போனார். அவர் தந்தையின் நண்பர் நாராயணசாமி செட்டியாரின் வாட்ச் கம்பெனி தான் அவரின் கடிகார உலகின் முதல் எழுத்து எனலாம். தினமும் பத்து பைசா சம்பளத்தில் நழுவி ஓடியது அவரின் ஆரம்ப நாட்கள். மகன் காலம் காட்டும் வாழ்வில் எதிர்காலத்தில் கரைந்துப் போக இது தான் ஆரம்பம் என்கிற முடிவில் இருந்தார் தந்தை. ஆனால் செல்வகணபதிக்கு பத்து பைசா என்பது அன்றைய தினம் பெரும் பணம் என்பதே பெருண்மை. அந்த பத்து பைசாவில் அதிகமான கனவுகள் சுழன்றோடும் காலமது. சேகர் வாட்ச் கம்பெனி அவருக்கு தொடர்ந்த பணியிடமாக ஆகிவிடும் எனும் நம்பிக்கை ஏற்பட்டபோது தான் திடீர் என அது நிகழ்ந்தது.
அதன் உரிமையாளருக்கு தினசரி 10
பைசா சம்பளத்தை உயர்த்தவோ,
அதையே நீட்டித்து சிறுவனை தொடர்ந்து தனது கடையில் பணியாற்றிடவோ யோசிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்.
கடுமையான வசை மொழிகளைக் கொண்டு சிறுவன் செல்வகணபதியை திட்டினார் செட்டியார்.
வேலையை விட்டுப் போக சொல்லும் சில சந்தர்ப்பங்களை தானே உருவாக்கினார்.
சிறுவன் கண்களில் நீரை தேக்கிக் கொண்டு கனவுகள் உடைந்துப் போன கவலையுடன் நடந்தான். வீடடிற்கு கீழே குனிந்தபடி நடந்த சிறுவன் முன் சிந்தனையைக் களைத்து நிமிர்த்தியது அந்தப் பெண் குரல். எதிரில் உரிமையாளர் நாராயணசாமி செட்டியாரின் மனைவி கமலாம்பாள் நின்றிருந்தார்.
ஏன்டா செல்வகணபதி அழுவுற !
ஐயா வேலைக்கு வேண்டான்னுட்டாங்க... என்ற செல்வகணபதியையே பார்க்கிறார் அம்மையார். அதுக்கா அழுவுற ?
அழுகையோடு மேலும் கீழும் தலையசைத்து ஆமோதிக்கிறான் சிறுவன்.
சரி வா ... நான் சொல்றேன் அவர்கிட்ட... என்று சிறுவன் செல்வகணபதியை அழைத்துக் கொண்டு திரும்பி நடக்கிறார் அம்மையார்.
நாராயணசாமி செட்டியார் மனைவியின் கோரிக்கையை ஏற்று மீண்டும் கடையில் அமர்த்திக் கொண்டார். அதிலிருந்து முதல் மாதம் ஒன்றாம் தேதி 15 ரூபாய் சம்பளம் பெற்றார் செல்வகணபதி.
செல்வகணபதி படிக்கும் காலங்களில் கூட அவர் சுயமான தேடலில் பின் வாங்கியதில்லை. கடந்துப் போன பள்ளி நாட்களின் விடுமுறைகளில் சக மாணவர்களுடன் இணைந்து திரிந்ததில்லை. தனது பெரியப்பா அண்ணாமலை செட்டியார் மிட்டாய் கடையிலும், அதே போல் சூர்யகாந்தி சுருட்டு கம்பெனி நடத்தி வந்த அவர் அண்ணன் கந்தசாமி செட்டியார் வீட்டிலும் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு உதவியாக செய்து பயன்படுத்தி தொடர்ந்திருக்கிறார். செல்வகணபதி படிப்பில் இருந்து அவரின் கவனம் மெல்ல தொழில் முறை முயற்சிகளுக்கு வித்திட்டது. இளமையிலேயே ஒவ்வொன்றிலும் நுணுக்கம் உணர்ந்தார். அப்பொழுதே கொத்து, இஞ்சிக் கொத்துடன் கூவிக் கூவி விற்பனை செய்தால் மாலை வரை பைசா பைசாவாக பாக்கெட் நிரம்பும். ஒரே இடத்திலும் நின்று விற்க முடியாது. போலீஸ் தொல்லையுடன் ... மற்ற வியாபாரிகளின் விரட்டுதல் என தத்தளித்து வணிகம் செய்த காலம் அது.
அலிவலம் பள்ளியில் இருந்து திருவாரூர் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அடியயடுத்து வைத்தவருக்கு காமராஜரின் நினைவு இன்றும் பலமாக ஆணியாய் இறங்கியிருந்தது. மூவர்ணமும் மனம் நிரம்பியிருந்தது. தி.மு.க. ஆட்சி நிலவிய காலம் அது. செல்வகணபதி சிறு வயதில் பத்திரிகைகளை புரட்டிப் படிக்கும் பெரியவர்களின் அருகில் போய் நின்று தனக்கான தகவலை சேகரிப்பான். அவ்வளவு உணர்வு சுடர் விட்டது அவனது சிறு உள்ளத்துக்குள்.
பள்ளி விடுமுறை நாட்களில் செல்வகணபதி தன்னை சோம்பலுக்குள் திணித்துக் கொண்டதில்லை.அந்தப் பிஞ்சு மனதுக்குள் குடும்பச் சுமை கூடியிருந்தது தான் காரணம். செல்வகணபதி கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு, கொத்தனார்களுக்கு கைவேலை பார்க்கும் சித்தாளாக சென்று தனது குடும்பச் சுமைகளில் பங்கெடுத்த காலமது.
சில விடுமுறை நாட்கள் இப்படியும், சில விடுமுறை நாட்கள் காரியாங்குடி பெரியப்பா அண்ணாமலை செட்டியார் வீட்டிலும், சூர்யகாந்தி சுருட்டு கம்பெனி உரிமையாளர் அண்ணன் எஸ். கந்தசாமி செட்டியாரின் புலிவலம் வீட்டிலும் கடந்தோடி இருக்கிறது.
அவருடைய ஒவ்வொரு சிறு விடுமுறையும் கூட அவரின் கடும் உழைப்பால் அவரது குடும்பத்தின் சிறு பொருளாதார வரவாக மாறி இருக்கிறது. சில சமயம் அப்பாவுடன் ரெங்கவிலாஸ் புகையிலை கம்பெனிக்குச் சென்று அப்பா புகையிலை பொட்டலம் மடிக்கும்போது, அவருடன் அமர்ந்து லேபிள்கள் ஒட்டியிருக்கிறான் செல்வகணபதி.
வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவனின் படிப்பு முற்றுப் பெற்று ஒன்பதாம் வகுப்புடன் வறுமையின் பொருட்டு புத்தகங்கள் பைகளுக்குள் நிரந்தரமாய் சிறைப்பட்டன. ஆனால் சிறுவன் செல்வகணபதி சராசரியாய் சோம்பித் திரியும் மனோநிலையில் அப்பொழுது இல்லை. தன்னால் இயன்றளவு குடும்பச் சுமைகளை தோள் மீது சுமக்கும் அவருக்குள் கதர் குறித்த சிந்தனை கனியத் துவங்கியது. அன்றைய தினம் இளைஞர்கள் நடிகர்களையும் நாத்தீகம் பேசுபவர்களையும் சுற்றி வலம் வந்த காலங்களில், இவரின் எண்ணமெல்லாம் கதருக்குள் கனிந்து நின்றது. காமராஜரின் கட்சிப் பணியும், காங்கிரசின் தியாக உணர்வும் செழிப்புடன் திளைத்தது.
சிறு வயது என்பது நல்ல பழக்க வழக்கங்களை விதைக்கும் பருவம் என்பதே உண்மை. அதனால தான் இளமையில் கல் என்பது. அது செல்வகணபதிக்கும் சிறப்பூட்டியிருக்க வேண்டும். வறுமையின் சதி அது.
மென்மையான இளம் மனக்குள் உண்மையும் சத்தியமும் உறுதியினால் அது தொடர்கதையாகும் என்பது நிஜமாகி தொடர்ந்தே நடந்தேறியது. கனவுகள் புரண்டது. அலையயன செல்வகணபதிக்குள் மெல்ல ...மெல்ல ... அரும்பு மீசை குறும்புத் தனமாக எட்டிப் பார்த்தது மூக்கிற்கு கீழே . சுற்றித் திரிகிற காளைப் பருவமது. ஆனால் .... சுழன்றோடியது.