2
சிறுவன் செல்வகணபதியின் வாழ்க்கையில் இளமைக்காலம் இனிமையாய் நகரவில்லை ... வறுமைகளின் வலி உணர்ந்த வாழ்க்கை ... அப்பா தெட்சிணாமூர்த்திக்கும், அம்மா மீனாட்சியம்மாளுக்கும் மகன் மேல் தனிப்பெரும் அன்பு உண்டு.
அது சகோதரர்கள் சாமிநாதன் பேரிலும், முருகானந்தம் பேரிலும், சகோதரிகள் சுசீலா, திலகா பேரில் உள்ளது போன்ற அன்பின் மிகுதி.
செல்வகணபதியின் இளமைத்தடம் உணர்ந்த அலிவலம் பள்ளி, அவரது விரல் பிடித்து செல்வகணபதிக்கு அகரம் சொல்லி தந்தது ஆரம்பப் பள்ளி.
பள்ளிப் பருவம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இனிமை நிறைந்தது தான். ஆனால் செல்வகணபதி போன்றவர்களுக்கு கசப்புடன் கூடிய இனிமையானது. ஒரு மனிதனின் வளர்முகப் பருவத்திலேயே கொடுமையானது வறுமைக்குள் சிக்கிக் கொள்வது. மிகப்பெரும் துரதருஷ்டமாகும். அது அவருக்கும் நிகழ்ந்தது. சாதனைகளை தொட்டு எட்டிப் பிடித்திட சோதனைகளை கடந்து தான் தொடர்ந்து நடந்து வருவதை உணர்ந்திருந்தார் அவர்.
பள்ளியில் ஆசிரியரின் பார்வைக்கு மண்டையில் ஏறாத மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்களில் நமது செல்வகணபதியும் ஒருவன். தினசரி ஆசிரியரின் பிரம்பின் நீளம் இவனாலேயே தீர்ந்து போகும். தினசரி அடி வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் செல்வகணபதி.
வீட்டின் நெருக்கடியையும், சிரமத்தையும் நன்கு உணர்ந்திருந்தான் செல்வகணபதி. ஜவுளிக்கடைகளில் தொங்கும் வண்ண வண்ண சட்டைகள் மேல் கொள்ளை ஆசை வரும். அவனுக்கு அன்றைய நிலையில் ஆனால் பொருளாதாரம், அதை எட்டிப் பிடித்திட இடம் தரவில்லை. சிறு வயதில் பள்ளிச் சீருடை தான் அவனுடைய விழாக்கால ஆடையாக இருந்ததுள்ளது.
அவனது வீட்டில் தனியாக வண்ண ஆடைகள் எடுக்க மாட்டார்கள். வறுமையின் பொருட்டு பள்ளிச் சீருடையே அவனின் ஆடைக்கனவுகளை நிரப்பி விட்டது. இளமையில் அதுவும் தாய்மாமன் நாராயணசாமி செட்டியார், லெட்சுமண செட்டியார் இருவர் வீட்டில் இருந்து வரும் சீருடை எத்தனை நாள் உழைக்கும். அவனது கால் சராயி நைந்து கிழிந்து பின்பக்கம் போஸ்ட் பாக்ஸ் என சக மாணவர்கள் கிண்டலடித்தாலும் அந்த ஆடையை விசிறி எறிய அவனுக்கு வறுமை இடம் தரவில்லை.
இளம் வயதில் அவன் அணிந்த சீருடைகளில் தையல் பார்க்காத இடமேயில்லை எனலாம். இனிமையான அவன பள்ளி நாட்களில் சில துடிப்பாக பள்ளிகளில் நடக்கும் சில இனிமயான நிகழ்வுகள் மட்டும் அவனை சந்தோப்படுத்தியிருக்கின்றன.
அப்பொழுதெல்லாம் பள்ளிக்கூடத்தில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைச்சர்களை நியமிப்பது உண்டு. முதலமைச்சர், உணவமைச்சர், தோட்ட அமைச்சர், சுகாதார அமைச்சர் என மாணவர்களை உற்சாகப்படுத்தி பள்ளிக் கடமைகளில் முதன்மைப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட சூழலில் செல்வகணபதி உணவமைச்சராகச் செயல்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமை, பால் பவுடர்கள், பனை எண்ணைகளில் தயாராகும் புதிய உணவில் மாணவர்கள் ஒழுக்கத்துடன் அமர்ந்து உணவை உட்கொள்ள இந்த அமைச்சர் பதவி வழிகாட்டியிருக்கிறது அன்றைய தினங்களில் அவருக்கு.
அந்த காலகட்டத்தில் சென்னை மாகாணம் என்பது பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.ஒட்டுப் போட்ட கால்சராயுடன் புத்தக நறுமணம் உணர்ந்தான் செல்வகணபதி. கூரைப் பள்ளியில் அகரம் அறிந்தவன். தார் நனைக்கப்படாத சாலை கடந்து ஆரூருக்குள் மெல்ல அடியயடுத்து வைத்தான் நமது செல்வகணபதி. செருப்பு இல்லாத வெற்றுக் கால்களுடன் பிஞ்சுப் பாதங்கள் தினம் பயணம் உணர்ந்தது. அப்பொதெல்லாம் குடும்பத்தின் வறுமைச் சுமைகளில் தன்னையும் திணித்துக் கொள்ளும் முனைப்பு அவனுக்கு இருந்தது.
பொங்கல் திருநாளில் திருவாரூர் வீதிகளில் கைகளில் மஞ்சள் தொடர் போராட்டம் மனதுள். அந்த செயல் வேகம் அவனை வேலைக்குப் போக தூண்டியது. அப்பாவின் நண்பர் நாராயணசாமி செட்டியாரின் சேகர் வாட்ச் கம்பெனியில் வேலைக்கு சென்றான். சேகர் வாட்ச் கம்பெனியின் சிறப்பு. அதன் உரிமையாளர் நாராயணசாமி செட்டியார் அவர்கள் மக்களின் நன்மதிப்பை சிறைபிடித்திருந்தார் கடிகார வணிகத்தில் ...
செல்வகணபதி நாராயணசாமி செட்டியாரிடம் வேலைக்கு அமர்ந்தார். அப்பொழுது தான் நண்பர் ஜெயபாலின் நட்பு கிடைத்தது. ஜெயபால் செல்வகணபதிக்கு தேடிக் கிடைத்த பெரும் செல்வம். ஜெயபால் அழுத்தமான அன்பின் வடிவம்.
ஜெயபால் மூலமே டீ, காஃபி, சாப்பிடும் பழக்கம் செல்வகணபதியிடம் இருந்து சுத்தமாகத் தொலைந்து போனது ... அன்று முதல் இன்று வரை.
ஜெயபாலின் நட்பு, நகமும், சதையும் என்று சொல்லி வளர்ந்தபின் வெட்டி வீசும் வியங்களுடன் ஒப்பிட முடியாது. இரத்தமும், தசையுமான நட்பு அது. செல்வகணபதிக்குள் காங்கிரஸ்காரன் வளர்ந்து செழித்துக் கொண்டிருந்தான்.
அண்ணாத்துரையின் ஆட்சி இரண்டாண்டு காலம் தொடர்ந்து நடைபெற்று ... அண்ணாவின் மொழிக் கொள்கை, கலப்பு மணம், மாநில சுய ஆட்சி, மத்தியில் கூட்டாட்சி எனக் கொள்கையில் ஓங்கிய காலம். அண்ணா 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3- ஆம் தேதி தமிழகம் விட்டு மண்ணுலகம் சென்று விட்டாலும் மாற்றுக் கட்சியின் மாபெரும் தலைவரின் மரணம் செல்வகணபதியை சற்று சங்கடம் தான் படுத்தியது.
(இனி அவன், இவன் எனும் ஏக வசனம் வேண்டாம் . அடுத்த அத்தியாயங்களில் அடக்கியே வாசிப்போம். ஏனெனில் தோளுக்கு வளர்ந்த பிள்ளையாகி விட்டார் செல்வகணபதி)















No comments:
Post a Comment