Sunday, February 12, 2012

சக்தி செல்வகணபதி - 8


8





பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கும் தங்கம் டவரில், புதிய வாட்ச் ஷோரூம் ஒன்றைத் துவக்கும் திட்டம் மனதிற்குள் நுழைந்தது சக்தி செல்வகணபதிக்குத் தந்தை தெட்சணாமூர்த்தி அவர்களின் மூப்பின் நிறைவை முழு நிறைவுடன் கொண்டாடத் திட்டமிட்டுத் தந்தையாருக்கு எண்பதாவது சதாபிஷேகத்தைச் சிறப்புடன் செய்து முடித்தார் சக்தி செல்வகணபதி. நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து முழு நிறைவாய் முழுமைப்படுத்தினார் தந்தையை.


சக்தி செல்வகணபதியிடம் தனிப்பட்ட ஒரு சிறப்பு உண்டு. விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பார்களே அப்படித் தன்னளவில் அவ்வப்போது மறைந்த தலைவர்களைத் தன்னுடைய கடையிலேயே மாலை அணிவித்து அவர்களின் பிறந்தநாள், மறைந்த நாள்களில் மறக்காமல் அவர்கள் நினைவு கொள்வதை, சிறப்பு செய்வதை இன்றுவரை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.





வணிகம் வேகமாக உயர்ந்தோடும் அந்தத் தருணங்களில் பாங்காங்கிற்கு (தாய்லாந்து) சுற்றுலா பயணம் அவரைத் தேடி வந்தது. நிறைவாய்ப் பாங்காங்கிற்குச் சென்று திரும்புவதெனத் திட்டமிட்டார் சக்தி செல்வகணபதி. சாதாரண மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்தை வறுமையின் பொருட்டு விற்பனை செய்த அதே வீதிகளில் வைராக்கியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வெற்றியுடன் நின்றார் சக்தி செல்வகணபதி.






அவருடைய உழைப்பின் வேர்வைத் துளிகள எங்கெங்கும் விரிந்து பரந்திருந்தும் திசையயங்கும் அவரைத் திரும்பிப் பார்க்கும் பொருட்டு திருச்சி வானொலி நிலையத்தில் நிகழ்த்தப்படும் உழைப்பால் உயர்ந்தவர் எனும் நிகழ்ச்சியில் குரல் வழியே அனைத்துத் தமிழர்களின் இதயத்திற்குள் நுழைந்தார் சக்தி செல்வகணபதி. காங்கிரஸின் மேல் அவர் கொண்ட பிடிப்பும், உண்மையான உறுதியும், அவரைத் திருவாரூர் மாவட்டம் காங்கிரஸ் சேவாதளத்திற்குத் தலைவராக்கியது. அயல் நாடுகளுக்குச் சென்று அங்குள்ள இயற்கை மற்றும் அபூர்வங்களைக் காண்பதில் அவருக்குத் தனி ஆர்வம் உண்டு. அதன் அடிப்படையில் அவர் அந்தமான் பயணத்தை மேற்கொண்டார் மறுபடியும்.

No comments:

Post a Comment