Sunday, February 12, 2012

சக்தி செல்வகணபதி - 4


4
காந்தியச் சிந்தனை உடலும் மனமும் உறுதிப்பட்டால் அதிக நாட்கள் வாழ்க்கை தொடரும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் செல்வகணபதிஇ அதற்காக ஆரூரான் உடற்பயிற்சி கழகத்தில் நண்பர்கள் ஜே. பழனிவேல்எஸ்நடராஜன் இவர்களுடன் வேர்வை விழுதுகளை விதைத்து உடலை உரமாக்கினார். உள்ளத்தைப் பதமாக்கினார் செல்வகணபதி. கடிகார முட்களுடன் அவர் பயணம் தொடர்ந்து நடந்தது. அலிவலத்தில் இருந்து காலையில் புறப்பட்டு திருவாரூர் வந்து சேரும் செல்வகணபதி தனது சொல்லையும், செயலையும் கொண்டு ஆரூரின் அடிச்சுவட்டிலேயே பார்போற்றும் மனிதனாகும் எண்ணம் தழைத்தது. அன்றிலிருந்து அவருக்கு காங்கிரஸின் பேரில் மாறாத பற்றும் கதராடையின் மேல் விலகாத விசுவாசமுமாய் கனிந்து தொடர்ந்தது. இனிமையான இளமைத் தடங்களை உணர்ந் து நடக்கும் தருணங்களில் தான் அவருக்கு பேரிடியாக இறங்கியது. உயிரின் உயிராய் நேசித்த ஒருவரின் மரணம் தனது அலிவலம் வீட்டின் நடுக்கூடத்தில் அமர்ந்து உணவைப் பிசைந்து ஒருவாய் உணவை சாப்பிட முனையும்போது வாசலில் உரத்த குரலும் நிழலும் தென்பட்டது.








 டேய் ... செல்வகணபதி காமராஜர் செத்துப் போயிட்டாராம் என்றது நண்பரின் குரல். செல்வகணபதி உணவில் இருந்து கைகளை உதறி எழுந்தார். மனம் கடுமையாக சலனப்பட்டது. அவரின் கண்களில் உணர்வின்றி நீர்த் ததும்பியது. தொண்டையில் ஈரம் உலர்ந்து கடுமை பொங்கியது. ஏன் இப்படி நடந்தது? தமிழகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் இருள் மண்டிப் போன உணர்வு செல்வகணபதிக்குள் இருந்தது. செல்வகணபதிக்கோ தனது குடும்பத்தில் ஒருவர் மறைந்துப் போன உணர்வு அவரை மேலும் உடைத்துச் சிதைத்தது.









காமராஜரின் இறுதி ஊர்வலம் எப்படி நிகழும் என்கிற எண்ணத்தைச் சுற்றி நின்ற நண்பர்கள் சொல்லி  சொல்லி ஓய்ந்தபோது கூட, செல்வகணபதிக்கு அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்கிற உணர்வு தட்டுப்படவில்லை. ஆனால் அப்போதைய பிரதமர் அன்னை இந்திராகாந்தி  அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார் அதை.







கிங்மேக்கர் இன்றி நமக்கான கிரீடம் வந்துவிடவில்லை என்பதை - காமராஜரின் அருந்தொண்டை உணர்ந்த அன்னை இந்திராகாந்தி மரபுகளை உடைத்தெறிந்து மாநகர் டெல்லியில் இருந்து தியாகத்தலைவர் காமராஜரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்து சேர்ந்தார். சென்னை ராஜாஜி மண்டபத்தில் கர்மவீரர் கால் நீட்டி அமைதியாய் இறுதியாய் உறங்கிட, அன்னை இந்திரா அவருக்கு அஞ்சலி செலுத்துவதைச் சொல்லிப் பெருமிதப்பட்டார் செல்வகணபதி. காமராஜரின் மறைவு குறித்த சோக நிழல்கள் அவ்வளவு விரைவில் செல்வகணபதியை விட்டு நழுவிடவில்லை. எந்த பிரதமரும் நிகழ்த்திடாத நிகழ்வை அந்த தருணத்தில் இந்திரா நடத்தி முடித்தார். காமராஜரின் பூத உடல் ராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட, காமராஜரின் உடல் காந்தி மண்டபத்திற்கு எரியூட்ட எடுத்து வரும்போது இறுதிவரை நின்றார் அன்னை இந்திரா. கிரீடம் தயாரித்த கிங்மேக்கருக்காக வானம் கூட அன்று ஹோ... வென்று அழுது தீர்த்தது அன்று.

No comments:

Post a Comment