6
செல்வகணபதி தன் பொருளாதார வீக்கங்களுக்கு உட்பட்டு, தற்போதுள்ள புதிய பேருந்து நிலையம் திருவாரூர் தைலம்மை தியேட்டர் வாசலில் (தற்போது ராஜா ராணி டீ ஸ்டால் உள்ள இடம்) மிக சாதாரணமான ஒரு சாலையோர வியாபாரியாகத் தான் கற்றுக் கொண்ட கடிகாரத் தொழிலைத் துவக்கினார் நண்பர் ஜெயபாலிடம் ரூபாய் 1000 பெற்றுக் கண்ணாடி பெட்டி தைலம்மை தியேட்டர் வாசலில் செல்வகணபதி தனது முயற்சிகளின் முதல் படியைத் துவங்கினார். ஆனாலும், கட்சிப் பணியையோ, கதர் உலகத்தையோ அவர் தவிர்க்கவில்லை. எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலம் அது, சில புதிய திட்டங்களையும், நல்லநலத்திட்டங்களையும் கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். செல்வகணபதி நண்பர்களுடன் இணைந்து இலங்கைத் தமிழரின் இன்னுயிர் காக்க ஒத்துழைத்தனர்.
மகனைப் பொறுப்புகளுக்குள்ள புகுத்திட வீடு தீர்மானித்தது. மனிதனின் பொறுப்புகளைக் கூடுதலாக்குவது திருமண பந்தம் தானே ? அதைத் தீர்மானித்தது வீடு. திருமணத்திற்கான முயற்சிகள் தொடர்ந்த செல்வகணபதிக்கு. தனது இல்லற வாழ்வின் இணையாகக் கைத்தலம் பற்றினார் வாசுகி. இல்லறம் இனிதாய்த் தொடர்ந்தது செல்வகணபதி வாழ்வில், பொறுப்புகளும் சுமைகளும் அதிகப்பட்டன. அவரது வாழ்வில் தாய் தந்தையருக்கு அவர் தவமிருந்து பெற்ற மகனாய் இல்லத்தரசிக்கு இணையான சிறப்பான கணவனாய் அவர் வாழ்வு தொடர்ந்தது. கட்சிப் பணிகளுடன் இறை நம்பிக்கையுடைய சக்தி செல்வகணபதி ஆன்மீகப் பணிகளையும், நலிவுற்ற மக்களுக்குத் தன்னால் இயன்ற நற்பணிகளையும் தொடர்ந்தாற்றினார். சாதி, மதம், அரசியல் என்ற சுவர்களை அதில் அவர் கொண்டிருக்கவில்லை.
திருமணத்திற்குப் பின் மனித வாழ்வு திரும்பி விடும் என அத்தகைய தருணங்களை உணர்ந்தவர்கள் சொல்வார்கள். செல்வ கணபதிக்கும் அது நிகழ்ந்தது. தனது புதிய பேருந்து நிலைய தைலம்மை தியேட்டர் வாசல் வாழ்க்கையில் இருந்து, திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் ஒரு கடையைத் துவங்கினார். திருவாரூர் சாலைகள், மருத்துவமனை, அரசு அலுவலகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி தினசரி பத்திரிகைகளில் எழுதி வருவதைக் கண்ட தினமலர் நிருபர் ஜெயபால் செல்வகணபதிக்கு வழங்கிய பட்டம் அது.
‘சக்தி’ என்கிற பெயருடன் துவங்கியது அப்பொழுது அவருக்கு மிகவும் நெருக்கமாக அறிமுகமான பத்திரிகை உலக நண்பர் ‘தினமலர்’ ஜெயபால் அவர்கள் மூலம் வழங்கப்பட்ட பட்டமே ‘சக்தி’ ‡ வாழ்வின் இணை சேர்ந்த தருணத்தில் வந்து சேர்ந்தது. ‘சக்தி’ எனும் பட்டம் அன்று துவங்கி அழைக்கப்பட்டது. ‘சக்தி’ செல்வகணபதி எனப் புதிய நிமிட முள்ளைக் காட்டி கடிகாரத் தொழிலில் புதிய முயற்சிகளும் புதிய நம்பிக்கைகளும் அவருக்குள் துளிர்விடத் துவங்கியது. சிறகுகள் இலக்கை நோக்கி அசைப்பது உறுதி. அவருக்குப் புதிய நதிகள் கலந்து புரண்டு நழுவி ஒடி ஒரு சிற்றோடையைச் சிறப்பாய் அமைத்தது போல் மகன் புவியரசு பிறந்தான். தந்தை எனும் உயர்வுக்குத் தலைநிமிர்ந்தார் ‘சக்தி’ செல்வகணபதி.
மகன் புவியரசு தொடர்ந்து ஓராண்டுகள் கடந்து மகள் கலையரசி செல்வகணபதி கைகளில் தவழ்ந்தாள். பிரபலமான அஜந்தா வாட்ச் நிறுவனம் சக்தி செல்வகணபதியின் வாட்ச் வணிகத்தின் சிறப்பைப் பாராட்டி, தாய்லாந்திற்கு (பாங்காக) அவரைச் சுற்றுலா பயணியாய் அழைத்துச் சென்றது.
கட்சிப்பணியிலும், மக்கள் பணியிலும் தன்னை முழுமையாக்கிக் கொண்ட ‘சக்தி’ செல்வகணபதி தனது வணிக நிறுவனத்தில் நண்பர்களைத் தொடர்ந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மக்கள் பணியும், உழவாரப் பணியும் ஒருங்கிணைந்து ஆற்ற அவருக்குக் கிடைத்தது புதிய பாதை. அறிவுசார் பெரியோர்களைக் கொண்டு பட்டிமன்றம் நடத்துதல். அலிவலம் கிராம நலப்பணிகளைக் கவனித்தல் மற்றும் இருளுக்குள் இருக்கும் இறையை ஒளியேற்றி வணங்கிடச் சிறப்பான உழவாரப் பணியை மேற்கொள்ளுதல் எனத் தொடர்ந்தார்.
தரை ‡ தண்ணீர் ‡ இன இரு மார்க்கங்களில் நீண்ட தூரம் கடந்தவர் இப்பொழுது ஆகாய் மார்க்கத்தில் அடுத்த நாட்டிற்குச் செல்லும் இலக்கின் மேல் ஆசை எழ, அது தேடி வந்த வாய்ப்பும் சிறப்பானதாக அவருக்குத் தோன்றியது. மகள் கலையரசி இரண்டாவதாய்ப் பிறந்த மகத்தான போயம் என்று அதை நினைத்தார் ‘சக்தி’ செல்வகணபதி. பிழைப்புக்காகவும், தொழிலுக்காகவும், தொழில் கற்கவும் தூரதேசம் சென்றார். இப்போது சுற்றுப்பயணமாய் விமானம் மூலம் விரையும் நல்ல சூழல் அவருக்கு வந்தமைந்தது. சுற்றுலா பயணியாய் அயல் மண் தொடத் தயாரானார் ‘சக்தி’ செல்வகணபதி. பயண ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், காமராஜர் பற்றிய எண்ணங்களும், காங்கிரஸ் குறித்த சிந்தனையும் அவருக்குள் அணிவகுத்து நின்றன.
எப்படி மாமனிதர் காமராஜர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து ஜனங்களின் மனதில் அமர்ந்தாரோ, அதை நினைத்துக் கொள்வார் சக்தி செல்வகணபதி. காமராஜர் ஒன்பது ஆண்டு சிறைவாசமும், அதே ஒன்பது ஆண்டு காலம் முதல் அமைச்சராகவும் இருந்ததைச் சக்தி செல்வகணபதி தன் வாழ்நாளில் ஒவ்வொரு தருணத்திலும் நினைத்துக் கொள்வார். முதல் தடவை சிங்கப்பூர் சுற்றுப் பயணத்தில் அவர் அப்படித்தான் கடைகளில் வேலை செய்திருக்கிறார். அதற்கு முன்மாதிரி தலைவர் காமராஜர்தான் எனப் பின்னாளில் நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூருக்கு ஆகாயத்தில் பறந்திட ஆயத்தமானார் சக்தி செல்வகணபதி. காலண்டர் தாள்கள் நழுவிட, காற்று கிழித்து விமானம் ஆகாயத்தில் பறக்கும் நாட்களை எண்ணினார் ; பறந்தார் சுற்றுலா பயணியாய் சிங்கப்பூர்.



















No comments:
Post a Comment