சிங்கப்பூர் பயணத்தில் இருந்து திரும்பினார் சக்தி செல்வகணபதி. அவரைத் தாய் மண் வரவேற்று நின்றது. ஆனால், சிங்கப்பூரில் இருந்து சக்தி செல்வகணபதி திரும்பிய பின் அரசியல் சூழல் சற்று கடுமைப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் சுனக்கம் தெளிவற்ற அரசியல் சூழல் இவைகளை நோக்கினார். அப்பொழுது அவரைத் தேடி வந்த பதவி குமரி ஆனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸின் திருவாரூர் நகரப் பொறுப்பு தேடி வந்தது. அவருடைய இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்வில் கதராடை கட்சிகளுக்குள் இருந்ததைத் தவிர வேறெங்கும் பதவிக்காக புகழுக்காக சக்தி செல்வகணபதி செல்வதை விரும்பவில்லை. காந்தியையும், காமராஜரையும் மனதில் நிலைநிறுத்தும் குமரி ஆனந்தனின் கட்சியில் நகரப் பொறுப்பு என்பது தேசியத்தைத் திராவிடத்திற்குள் கட்டுப்பட்ட ஒன்றுதானே என உறுதிபடுத்திக் கொண்டார் சக்தி செல்வகணபதி. கட்சிப்பணிகள், நலிந்தோர் நலன், விழாக்களுக்குச் சென்று தன்னை முதன்மைபடுத்தி முன் நின்று செயலாற்றுதல் என்பவை தொடர்ந்தது அவரிடம். தனது அலிவலம் மண்ணில் புதிய வீடு கட்டும் முயற்சியை அந்தத் தருணத்தில் தான் அவர் மேற்கொள்ளத் திட்டமிட்டார். ஆனால், வீடு கட்டுதல் என்பது சாமான்ய வியமல்ல. வீடு மொத்தமும் இறங்கி வேலை பார்த்தாக வேண்டும். அப்போதுதான் அது முழுமையடையும் என்பதை உணர்ந்திருந்தார் சக்தி செல்வகணபதி. ஆனால், வீடு கட்டும் அன்றைய அந்தக் காலக்கட்டங்களில் சிரமத்துடன் கவனிக்க வேண்டியதாகிப் போனது. தானே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கி ஆட்களை எதிர்பார்க்காமல் கல்லும் மண்ணும் சுமந்ததும் உண்டு.
அந்தச் சூழ்நிலைகளில்தான் அவருக்கு அருமை நண்பர் அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிபுணர் மு. வைத்தியநாதனின் நட்பு கிடைத்தது. ஆனால், அவரது வாழ்வில் மகிழ்வான சூழ்நிலையில் அதிர்ச்சியாய் இறங்கியது. அன்றைய தினம்இராஜீவ் காந்தியின் மரணம், வேகமாக விரிவடைந்து அவரின் இல்லமெனும் கனவு காங்கிரீட், அரசியலும் ஆன்மீகமும் இரு வேறு திசைகளாக இருந்தாலும் அவைகளில் அவரின் பயணம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அதன்படி அவருக்குத் திருவாரூர் கீழவீதியில் உள்ள பழனியாண்டவர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் பணி அவரைத் தேடி வந்தது. ஏற்றுக் கொண்ட பணியில் இம்மியும் தவறாது சிறப்புடன் செய்து முடிக்கத் தீர்மானித்தார் சக்தி செல்வகணபதி. அதன்படி தான் அறங்காவலர் குழுத் தலைவராய் இருந்த கீழவீதி பழனியாண்டவர் கோவிலுக்குப் பல சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் தன் சொந்த முயற்சியில் சக்தி செல்வகணபதி. வாழ்வில் அடுக்கடுக்காய் உயர்வு கண்டது அவரின் வாழ்வு. ஆனால், ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த அன்னை இந்திராவின் அரும்புதல்வர் ராஜீவ் காந்தியின் மரணம் நாட்கள் கடந்தும் அவரை வாட்டி வதைத்தது மனமெங்கும். அதற்குப் பின் நரசிம்மராவின் அரசு பதவியேற்புக்குப் பின்னும், மறைந்த ராஜீவ் காந்தியின் செயல் திறனிலேயே அவர் மனம் நிலைத்து நின்றது.
வர்த்தகர் மத்தியில் சக்தி செல்வகணபதியின் வளர்ச்சி மகிழ்வாய் இருப்பதை உணர்த்தியது. அதற்கும் பின் வந்த நாட்கள் திருவாரூர். வர்த்தக சங்கப் பொறுப்பு V.லு.னி. ராதாகிருஷ்ணன் தலைவராகவும், குளோப் ஆறுமுகத்தைப் பொதுச் செயலாளராகவும் கொண்ட வர்த்தக சங்க ஆண்டில் சங்கச் செயலாளராகத் தேர்வு பெற்றார் சக்தி செல்வகணபதி.
No comments:
Post a Comment