5
இளமைப்பருவம் என்பது ஒரு மனிதனுக்குக் கட்டுக்கடங்கா காளை உணர்வுள்ளது. அதை மேன்மைப்படுத்த அந்த இளம் காந்தியவாதிக்குத் தெரிந்திருந்தது. செல்வகணபதி தன் பொறுப்பைத் நன்கு உணர்ந்திருந்தார். அந்த இளமைப் பருவத்தில் அவருக்குக் கிடைத்த அந்த வாய்ப்பு அற்புதமானதாய்ப்பட்டது. தன் தாய் மண்ணை விட்டு அயல் மண்ணில் காலடி பதிப்பது அற்புதமான தருணங்கள். அன்றைய நாளில் அதுவும் கடல் பயணத்தின் மூலம் வேறுநாடு செல்வது ஒரு புதிய அனுபவம். ஆனால் மகன் ஓராண்டு கழித்தே நாடு திரும்புவான் என உணர்ந்த குடும்பம். செல்வகணபதியின் அருமைத் தங்கையின் திருமணத்தை நடத்தி முடித்தது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சிதம்பரம் கப்பலில் தங்கை திருமணத்தை முடித்த கையுடன், சிங்கப்பூருக்குச் சுற்றுலா பயணியாகப் புறப்பட்டார் நண்பர் ஜயப்பன் ஜூவல்லரி சோமசுந்தரம்.
ஆனால், அலைகளுக்கு நடுவில் ஒரு அற்புதமான கப்பலுக்குள் இருக்கும் உலகத்தை ரசித்து ருசித்து அவர் பயணம் தொடர்ந்தது. ஏழு நாட்கள் னி.V. சிதம்பரம் கடந்து கப்பல் பயணத்தை முடித்து சிங்கப்பூர் மண்ணைத் தொட்டது. கடந்து சென்ற சிங்கப்பூர் மண்ணைத் தொட்டழும் கடிகார முட்கள் அவரைத் தொடர்ந்து தொட்டு நின்றன. ஊரில் நாராயணசாமி செட்டியார் கடையின் அனுபவத்துடன், கூடுதலாய் மணிகாட்டும் உலகத்தை மறுபடியும் தொடரத் தூண்டியது. அங்கு ஓராண்டு சுற்றுலா பயணியாகச் சிங்கப்பூர் சென்ற செல்வகணபதி அங்கு சும்மா இருப்பது சுகமில்லை என்பதை உணர்ந்து சிங்கப்பூர் நியூபாரத் வாட்ச் கம்பெனியில் பணியில் அமர்ந்தார்.
அங்குதான் அவர் டிஜட்டல் உலகத்தை மனதுக்குள் நிரப்பினார். சுற்றுலாவைச் சரியான தருணமாகப் பயன்படுத்திக் கொண்டார் செல்வகணபதி. கடல் கடந்து இருந்தாலும் கதராடைச் சிந்தனையை அவர் உதறித் தள்ளி விடவில்லை. அவ்வப்போது நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் போது சிந்தனை சிறகடித்து, தொழில் நுட்பத்தை அவரால் கற்க முடிந்தது. நியூபாரத் வாட்ச் கம்பெனியில் அவர் பணி சிறிது காலங்கள் நழுவி ஓடி, கடிகாரக்கடையின் படிகளை விட்டு இறங்கி வேறு திசை தேட முனைந்தபோது சிங்கப்பூர் கடற்கரையோரம் உள்ள தஞ்சம் பகார் எனும் இடத்தில் முப்பத்தைந்து மாடி அடுக்குகளில் கட்டப்பட்டு வந்த சுங்க இலாக்கா அலுவலகக் கட்டிட வேலைக்குக் கம்பி பிட்டருக்கு உதவியாளராகச் சென்று பதினேழு வெள்ளி ஒரு நாளைய சம்பளம் பெற்றார்.
ஓராண்டு காலம் அவரை அயல்மண் அற்புதமாய்ப் பாதுகாத்தது. அப்பொழுதுதான் இலங்கைத் தமிழரின் இன்னல் நிலைமை நண்பர்களின் மூலம் உணர்ந்து இருந்தார் செல்வகணபதி, ஓராண்டு சுற்றுலா காலம் முடிந்து திரும்பவும் தாய் மண்ணிற்குத் திரும்பினார் செல்வகணபதி. அவரை நண்பர்களும் உறவுகளும் இரு கரம் கொண்டு வாரியணைக்கக் காத்திருந்தன. பயணம் முடிந்து திரும்பிய கையுடன் அடுத்தடுத்த வாழ்வியல் தேடலுக்குள் தன்னை நிரப்பிக் கொள்வதற்கு முன், செல்வகணபதி இலங்கைத் தமிழருக்கான உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு தன்னை முழுமைப்படுத்திக் கொள்ள நினைத்தார். அதன்படியே செய்தும் முடித்தார். ஆனால் கற்றுக்கொண்ட தொழிலைத் தொடரப் பணம் அதிகமாய்த் தேவைப்பட்டது. அவருக்குத் தங்கையின் திருமணம், அதன் பிறகு கண்ணன் திருமணம் தனது அயல்நாட்டுச் சுற்றுலா பயணம் அதன்மூலம் ஏற்பட்ட பொருளாதாரச் சூழல், இவைகளுக்குச் சமன்பட்டுப் போனது அவர் குருவியாகச் சேர்த்த பணம். தொழிலை விரிவு கொள்ள யோசனை பிறந்தது அதன் விளேவே.





No comments:
Post a Comment