Sunday, February 12, 2012

சக்தி செல்வகணபதி - 10


10
அதே ஆண்டு திருவாடுதுறை ஆதினம் சக்தி செல்வகணபதிக்குச் சைவ சித்தாந்தப் படிப்பிற்காகச்சித்தாந்த இரெத்தினம்என்ற பட்டம் வழங்கி அவரைக் கெளரவித்தது. சக்தி செல்வகணபதியின் வாழ்நாளில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது 75 ஆம் ஆண்டு பவளவிழா பாதயாத்திரை. திருச்சி  ராஜன் பங்களாவில் இருந்து, வேதாரண்யம் புறப்பட்ட உப்பு சத்யா கிரஹயாத்திரை 135 பேர் காங்கிரஸ் தொண்டர்களின் பெரும் திரளாய்ப் புறப்பட திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தின் வழியாகக் கல்லணை, கோவிலடி வழியாகச் செல்ல முடிவாகி நடந்தனர். உக்ரமான வெயில் அடித்திட தொண்டர்களின் பயணம் உப்பு அள்ளுவதற்குத் தொடர் நடை போடப்பட்டது.





நடந்து சென்று கொண்டிருந்த கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழிகள் செருகிட கால்களில் செயலின்றி மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார் சக்தி செல்வகணபதி. தொடர்ந்து வந்த தொண்டர்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் பெரும் பரபரப்பு ; கூட்டம் கூடிற்று. சக்தி செல்வகணபதி முற்றிலும் சோர்வுற்று பேச்சின்றி இருக்க பயந்தே போனார்கள் அனைத்து கதராடைத் தொண்டர்களும். கோவிலடி அருகில் மயக்கமிட்டு விழுந்தார் சக்தி செல்வகணபதி என அதைப் பிரபல வார இதழான நக்கீரனில் அது செய்தியாகவும் வெளியாகியது.




அன்று தனது மகனின் இருபத்தைந்தாவது வயதில் அடியயடுத்து வைக்கும் தருணத்தில் திருவாரூர் வர்த்தக சங்கக் கட்டிடத்தில் உறவும், நண்பர்களும் சூழ்ந்து நின்று வாழ்த்திட தனது திருமண வெள்ளி விழாவைக் கொண்டாடினார் சக்தி செல்வகணபதி.



உயர்வான பதவிகளும், இயல்பான வாழ்க்கை நிலைகளும் அவரைச் சிறப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றன. ரோட்டரி சங்கத்தில் இருந்தபோது, பெங்களூரில் நடைபெற்ற ரோட்டரி நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்திருக்கிறார் சக்தி செல்வகணபதி. தந்தையின் தள்ளாத தொண்ணூறு வயதில் அவரை இழந்தவர் அதிகம் நேசித்த சக்தி செல்வகணபதி. மகள் கலையரசிக்கு, தனது சொந்த மைத்துனர் சிவனேசனுக்கே மணமுடித்து பேத்தி கீர்த்தனாவை மடி சுமக்க, சில நாள் கடந்து பேரன் ராகுலையும் மடி சுமந்தார் சக்தி செல்வகணபதி.
திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் சேவாதள அமைப்பின் நிலைப்பாடு எப்படி உள்ளது ? மேலும் விரிவாக்கத்திற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ?
புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, கரூர், ஓசூர் போன்ற இடங்களில் பயிற்சி முகாம்ள் நடந்தது போல நடத்தப்படுகிறது. இத்திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும்.
மற்ற சமூக அமைப்புகள், சேவை அமைப்புகளில் கட்சிப் பாகுபாடு இன்றி எல்லா தளத்திலும் மக்கள் பணியில் உங்களால் எப்படி ஈடுபட முடிகிறது ?
மக்கள் சேவைக்கு மதமோ, அரசியல் சாயமோ, பூசப்படாத எந்த மக்கள் பணியிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறேன். முதலில் மனிதனை மனிதன் நேசிப்பதற்குப் பிறகே நாம் அடுத்தடுத்த நிலைப்பாடுகளுக்குச் செல்ல முடியும்.
உங்கள் வாழ்க்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியையும், வறுமைகளையும் சந்தித்ததை உணர்த்துகிறது. கட்டுரை இப்போதிருக்கும் நிலையிலிருந்து அன்றைய நாளை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
இளமையில் நான் பட்ட சிரமங்களை நினைக்கும் போது பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது. நாம் மிகப்பெரிய நான்கு பேர் மதிக்கும் மனிதனாக வருவோமா, என்கிற நிறைய கேள்விகள் என்னுடைய இளமைப் பருவதில் இருந்தது. கடுமையான போராட்டமும், ஏராளமான சூழ்நிலைகளையும் வைராக்கியமாகக் கொண்டு வளர்ந்திருக்கும். அன்றைய தினம் நான் இருந்த சூழ்நிலை போல இன்றைய இளைஞர்கள் தங்கள் வறுமையை நினைத்துச் சுயமாக முன்னேற நினைக்க வேண்டும். தொழிலில் ஒன்றும் கேவலம் இல்லை. திருடாமல் பொய் சொல்லாத குறிக்கோளே உயர்ந்தது.
ஒரு காங்கிரஸ்காரராக இருந்தும் தமிழுணர்வுடன் உங்கள் வணிக நிறுவனத்திற்குச் சக்தி மணிப்பொறியகம் எனப் பெயர் வைத்துள்ளீர்களே ?
ஆமாம். முதலில் நான் மொழியை மதிக்கும் தமிழனாக இருக்க வேண்டும். நான் மட்டுமல்ல. அனைவரும் அதுபோல் சக மனிதனை நேசிக்கும் இந்தியனாக இருக்க வேண்டும். என்னுடைய நிலைப்பாட்டைப் பொறுத்தவரை வாழும் மண்ணுக்கும், சார்ந்திருக்கும் காங்கிரஸிற்கும் சரியானவனாக நடப்பதே நோக்கம்.
அப்படியயன்றால் ஈழத்தமிழரின் நிலைப்பாட்டில் உங்கள் நிலை ?
தமிழர்களுக்குச் சுயமான வாழ்க்கை தேவை என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஏனெனில் பெருவாரியான மக்கள் வாழும் ஒரு பகுதியைத் தமிழர் நிலமாக அங்கீகரிப்பது அவசியம். அதைத்தான் நான் முதல் பதிலிலும் சொன்னேன். தினமும் சுவாசிப்பது போல் உபயோகத்தில் இருக்கும் மொழியும், மொழி பேசுவபவனும் முக்கியம்.

உங்கள் வணிக நிறுவனத்தில் சாதி, மத, அரசியல், பாகுபாடின்றி மறைந்த தலைவர்களைக் கெளரவிப்பதாகச் சொல்கிறார்களே... அது குறித்து ?
நாட்டிற்காகவும், மொழிக்காகவும், மனித குலத்திற்காகவும் தன்னை வருத்திக் கொண்ட எவரும் உயர்ந்ததே. இதில் பாகுபாடு ஒன்றுமில்லை. நான் அப்படி வித்தியாசப்படுத்தியும் பார்க்கவில்லை. என்னைப் பற்றிய விமர்சனம் கூட உண்டு. எல்லாவற்றிற்கும் விழா கொண்டாடி போட்டோ எடுத்துக் கொள்கிறார் என்று. சமூகத்தில் நான் தனி மனிதனல்ல ; ஒன்றுபட்ட சமூகம். என் வணிக நிறுவனத்தைத் தினமும் காலையில் நிற்கும் போது இன்னாரிடம் மட்டுமே வணிகம் நிகழ்த்த வேண்டும் எனத் திறப்பதில்லை.
நமக்கு எல்லோரும் தேவை. எல்லா தரப்பும் தேவை. வாழும் நாளில் நேசிக்கத் தவறினால், வேறு எப்போது எந்தத் தருணத்தில் யாரை நேசிக்க முடியும் ? சரியோ, தவறோ வாழ்க்கை முழுவதும் பாகுபாடின்றி அனைத்தின் மேலும் நேசமாய் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment