Sunday, February 12, 2012

சக்தி செல்வகணபதி - 1


சக்தி செல்வகணபதி









நகரத்தின் மிச்சத்துடன் வாசனையுடன் ? தனக்கேரிய தனித்தவமான மண் வாசனையுடன் கூடிய கிராமிய கொஞ்சம் கலந்த சிற்றூர். நகர நாகரீகத்தின் தார் நனைக்கப்படாத கிராமிய செம்மணல் சாலைகள், கூர்மையான கப்பிகளில் கால்தடம் பதிக்க நடக்கும் சிற்றூர் அது. அன்றைய தினம் அவ்வூர் பேரூந்து வசதிகளை பெற்றிருக்கவில்லை... ஏழ்மை நிறைந்த குடிசைகள்... நடுத்தரங்களின் நாட்டு ஓடுகள் வசதி படைத்தவர்களின் சுண்ணாம்பு காரை ஒன்றிரண்டு ஏட்டு பூசிய வீடுகள். இது தான் அன்றைய அலிவலம்.
தேர்தல் பிரச்சார வாகனம் வேகமாக ஊருக்குள் நுழைந்தது. அரசியல் பிரச்சார ஓசை ஊரைக் கூட்டியது. மக்களின் ஓட்டு வங்கியை குறி வைத்து தினம் ... தினம் தேர்தல் பிரச்சார வாகனங்கள் ஊருக்குள் வந்து, போய்க் கொண்டு தான் இருந்தன. காற்றில் பிரச்சார வேன்களில் இருந்து வீசப்படும் துண்டு பிரசுரங்களுக்கு சிறுவர்கள் வேனை பின்தொடர்ந்து ஓடினார்கள். அந்தச் சிறுவனைத் தவிர. அந்த சிறவன் மட்டும் ஏனோ அந்த பிரச்சார வேனை வெறுப்புடன் பார்த்தான் ஏதோ எதிரியை பார்க்கும் தோரணையுடன். சிறுவர் கூட்டம் வண்ண வண்ணத் துண்டறிக்கைகளை சேகரித்தது. ஒரு சிறவன் மட்டும் வாசல் படியில் அழுத்தமாக  பிரச்சார வாகனத்தை முறைத்துப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கும் செல்வகணபதி அருகில் வந்தான். டேய்... செல்வகணபதி ஒனக்கு நோட்டீஸ் வேண்டாமா என்றான்.







வேணாம் ... எங்க கட்சி வேன் வரும். நான் வாங்கிக்குவேன். கருப்பு சிவப்பு கொடி பறந்த பிரச்சார வேன் அந்த நீண்ட மண் சாலையில் புழுதி கிளப்பி, போவதை வெறுப்புடன் பார்த்தான் அச்சிறுவன். அவனுக்குள் காந்தியம் வேறூன்றி நின்றது. அன்றைய காலத்தில், ஆத்தீகமும், நாத்தீகமும் உறுத்தும் எதிர்முனையாய் இருந்தாலும் தேர்தலில் கை கோர்த்திருந்த காலம் தி. . வின் ஆதரவுடன் காங்கிரஸ் களம் இறங்கி இருந்தது தி.மு.. ஜன சங்கம் , சுதந்திர கட்சி கம்யூனிஸ்ட்கள் ஓரணியில் நின்று கரல் உயர்த்திய காலம். காமராஜரின் உருவமும், காங்கிரசின் தியாகமும். செல்வகணபதி எனும் அந்த ஏழைச் சிறுவனுக்குள் அன்று விழுந்த விதை மெல்ல அரும்பி முளைவிடத் துவங்கியது. அவனின் போராட்டக் காலத்தின் தியாகங்கள் துளிர்விட்ட தருணங்கள் அது.

No comments:

Post a Comment